‘அந்த’ மாதிரி சோஷியல் மீடியா கமெண்ட்! ஜ்வாலையாக வெடித்த ஜுவாலா கட்டா!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
jwala-gutta
jwala-gutta

ஆன்லைனிலேயே இப்படி இருந்தாங்கன்னா… ஆஃப்லைன்ல எப்படி இருப்பாங்க? என்று கேட்டு தீச்சுவாலையைக் கக்கியிருக்கிறார் ஜூவாலா கட்டா.

இந்திய முன்னாள் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால் உடன் நெருக்கமாக பழகி வருகிறார். அவ்வப்போது இவர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் தங்களது நெருக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

jwalakatta-vishnuvishal1
jwalakatta-vishnuvishal1

இரண்டு பேரும் திருமணமாகி விவாகரத்து ஆனவர்கள் என்பதால் நல்ல புரிதல் இருவருக்குமிடையே நிலவி வருகிறது. ஹீரோயின் போல அழகாக இருக்கும் ஜுவாலா கட்டா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் தெய்வப் பெண் கையில் இருக்கும் கொடியில் சானிடரி நாப்கின் இருக்கும் படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த ஜூவாலா, ‘பீரியட்ஸ் ஆர் கூல்’ என்று பதிவு செய்திருந்தார்.

இதற்கு ஒரு நெட்டிசன் ஜுவாலா கட்டாவிற்கு ஆபாசமான வார்த்தையில் அவரது தாயாரை இழிவாக பேசியுள்ளார். இந்த மெசேஜை தைரியமாக வெட்டவெளியில் பகிர்ந்துள்ளார்.

ALSO READ:  ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!

மிகவும் தரக்குறைவான வார்த்தைகள் என்பதால் இப்படியும் சமூக வலைத்தளங்களில் சிலர் கொடூரமானவர்கள் இருக்கிறார்கள், இவர்கள் சமூக வலைதளம் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் மோசமானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்

jwalakatta

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.