பக்தி சேனலாம்… ஆனா ராமஜன்ம பூமி நிகழ்வு நேரலை இல்லையாம்! சர்ச்சையில் திருப்பதி தேவஸ்தானம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
svbc-channel
svbc-channel
  • அயோத்தி பூமி பூஜையில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு இத்தனை அலட்சியம் ஏன்?
  • திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் மீது ஆந்திரா பிஜேபி தலைவர்கள் தீவிரமான ஆத்திரம்.

250 டிவி சேனல்கள் அயோத்தி ராமாலயம் பூமி பூஜையின் நேரலையை மணிக்கணக்காக காண்பித்தபோது திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்விபிசி சேனல் எதனால் டெலிகாஸ்ட் செய்யவில்லை என்று ஆந்திர மாநில பிஜேபி துணைத்தலைவர் எஸ் விஷ்ணுவர்தன் ரெட்டி ஆத்திரமடைந்தார்.

பூமி பூஜையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேரலை டெலிகாஸ்ட் செய்யாதது ஏன் என்று பிஜேபி மாநில உப தலைவர் எஸ் விஷ்ணுவர்தன் ரெட்டி வினா எழுப்பினார்.

அயோத்தியா காட்சிகளை திருமலா பக்தி சேனல் எதனால் ஒளிபரப்புவது இல்லை என்று கேட்டார். 250 டிவி சேனல்கள் அயோத்தி ராமாலயம் பூமி பூஜையை நேரலையாக காட்டிக் கொண்டிருந்தபோது திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஏன் மறைந்தது என்று கேள்வி எழுப்பினார்.

விசாகப்பட்டினத்தில் முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன் சாரதா பீடம் சென்றபோது நேரலையாக ஒளிபரப்பிய திருமலை திருப்பதி தேவஸ்தானம் அயோத்தியா காட்சிகளை எதனால் மறைத்துள்ளது என்று எரிந்து விழுந்தார். 24 மணி நேரத்திற்குள் இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சர் ஜெகன், அறநிலையத்துறை அமைச்சர் பெல்லம்பள்ளி ஸ்ரீனிவாஸ், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் சுப்பாரெட்டி உடனடியாக இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று மாநில பிஜேபி டிமாண்டு செய்வதாக விஷ்ணுவர்தன் ரெட்டி குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.