நனவான மக்கள் கனவு! வியக்க வைக்கும் கனகதுர்கா பாலம்! ஒரு பருந்துப் பார்வை!

இந்தியா சற்றுமுன் சுற்றுலா லைஃப் ஸ்டைல்
kanakadurga-bridge
kanakadurga-bridge

அருமை அருமை என்று வியக்க வைக்கும் கனகதுர்கா பாலத்தின் ட்ரோன் பார்வை.

விஜயவாடா நகரவாசிகளின் பலநாள் கனவான கனகதுர்கா பாலம் செப்டம்பர் 4 ம் தேதி தொடங்கப் படுவதற்கு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

ஆந்திரா முதலமைச்சர் ஜெகன், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கரங்களால் செப்டம்பர் 4 ம் தேதி மாநிலத்தில் ரூ ஆறாயிரம் கோடி மதிப்புள்ள முன்னேற்ற பிராஜெக்ட்கள் தொடக்க விழா மற்றும் ரூ 5,700 கோடி மதிப்புள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா செய்ய இருப்பதாக செய்தி.

அதுமட்டுமின்றி இந்த கனகதுர்கா பாலத்தை அதேநாளில் மத்திய அமைச்சர் நாட்டிற்கு உடமை ஆக்குகிறார் . இந்தப் பின்னணியில் எடுத்த பாலத்தின் ட்ரோன் வீடியோ அனைவரையும் கவரும் விதமாக உள்ளது.

இந்திரகீலாத்ரி மலையை ஒட்டி கிருஷ்ணா நதியின் மடியில் அமைத்திருப்பதாக தோற்றமளிக்கும் இந்த பாலம் அருமை அருமை என்று அனைவராலும் வர்ணிக்கப்படுகிறது.

ஒருபுறம் துர்கம்மா…. மறுபுறம் கிருஷ்ணம்மா… இவர்கள் இருவரையும் ஒன்றிணைக்கும் விதமாக அமைக்கப்பட்ட இந்த பாலம் சிறப்பாக அனைவரையும் ஈர்த்து வருகிறது.

இது தொடர்பான ட்ரோன் வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.