அதிகமாய் உணவு கேட்ட ஒரு வயது குழந்தை! தாயும் பாட்டியும் சூடு வைத்த கொடூரம்!வைரல் வீடியோ!

இந்தியா கிரைம் நியூஸ்
Bangalore - 2026

கொஞ்சம் அதிகமாக சாப்பாடு கேட்ட குழந்தைக்கு அவரது தாயும், சித்தியும், பாட்டியும் சேர்ந்து கொடூரமாக சூடு வைத்த சம்பவம் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.

பெங்களூரு குருப்பனபாளையா பகுதியை சேர்ந்த இம்ரான் பாஷா, அஜீரா தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தையுள்ளது. இவர்கள் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர். இந்நிலையில், குழந்தை அதிகமான உணவு கேட்டதால் பாட்டி முபினா குழந்தையை தாக்கி சூடு வைத்து வந்தார்.

தொடர்ந்து 15 நாட்களாக தொடர்ந்து இவ்வாறு குழந்தையை சித்திரவதை செய்து வந்துள்ளார். குழந்தையின் உடலில் தீக்காயங்கள் பார்த்த தந்தை இம்ரான்பாஷா அது குறித்து மனைவியிடம் கேட்டார். இதற்கு மனைவியும் , மாமியாரும் பல்வேறு காரணங்களை உண்மையான காரணத்தை தெரிவிக்கவில்லை .

Bangalore 1 - 2026

சில தினங்களுக்கு முன் மறுபடியும் மாமியார் முபினா குழந்தைக்கு சூடு வைத்தார்.

குழந்தையை தாக்கி சூடு வைக்கும் வீடியோவை குழந்தையின் சித்தி செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது வைரலாக பரவியது. இதனைடயடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீஸூக்கும் தகவல் அளித்தனர்.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு இந்திராகாந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தாய், பாட்டி, சித்தி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மனதை உலுக்குவதாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.