சமையல் எரிவாயு மானியம்: முற்றிலும் நிறுத்திய மத்திய அரசு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
GAS CELINDAR

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை மத்திய அரசு முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில், எண்ணெய் விலையில், ஏற்பட்ட சரிவு விளைவாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தனர். இதனால் கடந்தாண்டு, ஜூலை மாதம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 494 ரூபாய் 35 காசுகள் என்ற நிலையில் விற்பனையானது. தற்போது 594 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

எனவே சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மானியமில்லாத சிலிண்டரின் விலைக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லாததால், மானியம் அளிக்கப்பட வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு ஏற்படவில்லை. இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் 20 ஆயிரம் கோடி ரூபாயை சேமிக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது

இந்நிலையில் இந்த நிதியை கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டள்ளது.

நாடு முழுவதும் 27 கோடியே 76 லட்சம் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 26 கோடியே 12 லட்சம் வாடிக்கையாளர்கள் மானியம் பெற தகுதி உள்ளவர்கள்.

கொரோனா காலம் தொடங்கியது முதல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் மட்டுமே எடுக்கும் வாடிக்கையாளர்களில் 18 கோடி பேர் மானியம் எதுவும் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.