தீவிர சிகிச்சையில் 70 வயது மூதாட்டி! 25 வயது இளைஞனால் நேர்ந்த கொடூரம்!

Published:

old-woman

தனியே வசித்து வந்த ஒரு 70 வயது மூதாட்டியை அந்த பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதி பெண்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது .

உத்தரபிரதேசத்தில் உள்ள பல்லியாவில் ஒரு 70 வயது மூதாட்டி ஒருவர் பிள்ளைகளும் மருமகன்களும் கை விட்டதால் தனியாக வாழ்ந்து வந்தார் .பக்கத்து ஏரியாவில் அவரின் மகளும் ,மருமகனும் வசித்து வந்துள்ளார்கள் .

அந்த மூதாட்டியின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் அவரின் பென்ஷன் பணத்தை கொண்டு அவர் சாப்பிட்டு வந்துள்ளார் .

இந்நிலையில் அவர் தனியாக வசிப்பதையும் ,உறவினரின் ஆதரவு அவருக்கு இல்லாததையும் அறிந்து கொண்ட அந்த பகுதியை சேர்ந்த ஒரு 25 வயது இளைஞர், சென்ற சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அந்த பாட்டியின் வீட்டு சுவரேறி குதித்துள்ளார் .

பிறகு அந்த பாட்டியை கை கால்களை கட்டி போட்டு விட்டு ,அவர் கத்தாமலிருக்க துணியை கொண்டு அவரை வாயை அடைத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு அந்த பாட்டி மயங்கியதும் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார் .

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

மறுநாள் காலையில் அந்த பாட்டி வலி பொறுக்க முடியாமல் கத்திக்கொண்டிருப்பதை பார்த்து அருகே வசித்தவர்கள் அவரின் மருமகனுக்கு போன் செய்து சொன்னதும், அவர் வந்து மாமியாரை மீட்டு அருகில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து உயிருக்கு போராடி வரும் அவருக்கு சிகிச்சைஅளித்து வருகின்றனர் .

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ளோர் இந்த காலத்தில் ஒரு பாட்டிக்கு கூட பாதுகாப்பில்லாமல் போய்விட்டதே என்று புலம்பி வருகின்றனர் .பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் போலீசார் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

Related articles

Recent articles

spot_img