தெலுங்கானாவுக்குள் மாவோயிஸ்டுகள்! ட்ரோன் மூலம் கண்காணிப்பு!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
dron 1

ட்ரோன் கேமரா மூலமாக கண்காணித்ததில் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து, தெலங்கானா மாநிலத்திற்குள் மாவோயிஸ்டுகள் நுழைந்திருக்கலாம் என்று தெலங்கானா காவல்துறை எச்சரித்துள்ளது.

மாவோயிஸ்டுகளை கண்காணிப்பதற்காக தெலங்கானா காவல்துறை பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. தற்போதைய ஆதாரங்களின்படி, ட்ரோன் கேமராக்கள் மூலம் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ட்ரோன் கேமரா மூலமான கண்காணிப்பில், சத்தீஸ்கர் சூக்ஸ்மா மாவட்டம் கிஷ்டாரம் காவல் நிலையப் பகுதியின் பாலோடி வனப்பகுதிக்கு அருகிலுள்ள ஒரு சிறிய குளத்தை மாவோயிஸ்டுகள் ஒரு குழு கடக்கிறார்கள் என்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

terrorist

இதனால், சத்தீஸ்கர் மாநில காவல் துறைக்கு, தெலுங்கானா காவல் துறை எச்சரிக்கை அனுப்பியுள்ளது. ட்ரோன் கேமரா மூலம், காவல்துறை அதிகாரிகள் மேலதிக கண்காணிப்புக்காக சில படங்கள் மற்றும் வீடியோக்களைக் பதிவு செய்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களில், பத்ராட்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் பல துப்பாக்கிச் சூடுகள் நடந்தன. இதில் செப்டம்பர் 3 ஆம் தேதி பத்ராட்ரி மாவட்டம் குண்டலா மண்டல் பகுதியில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 2 மாவோயிஸ்டுகள் செப்டம்பர் 7 ஆம் தேதி சார்லா மண்டலில் கொல்லப்பட்டனர். இந்த தகவலுடன் காவல்துறை அதிகாரிகள் முலுகு, பத்ராச்சலம், பினாபகா, மதானி பகுதிகளில் பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.