உயிருக்கு போராடிய முதியவர்க்கு தன்னுடைய ஆக்ஸிஜனை கொடுத்த மருத்துவர்!

Published:

sankath-mektha

மருத்துவர் ஒருவர் நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜனை அவருக்கு கொடுத்து உதவியதால் அந்த மருத்துவர் தற்போது உயிருக்கு போராடி வருகிற சம்பவம் ஒரு பக்கம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்தவர் சங்கெத் மேக்தா. மயக்க மருந்து நிபுணரான இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், கடந்த 42 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 65 வயது முதியவருக்கு நிலைமை மோசமானதால், சங்கெத் மேக்தா தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜனை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அந்த நோயாளிக்குக் கொடுத்தார்.

இதன் மூலம் அந்த நோயாளி காப்பாற்றப்பட்டார். மருத்துவர் ஒருவர் நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜனை அவருக்கு கொடுத்து உதவியதால் அந்த மருத்துவர் தற்போது உயிருக்கு போராடி வருகிற சம்பவம் ஒரு பக்கம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபக்கம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே மயக்கமருந்து நிபுணர்கள் இக்குபேஷன் செயல்முறையில் தேறியவர்களாக இருப்பார்கள். இதன் காரணமாகவே சங்கெத் தைரியமாக இந்த செயலை செய்துள்ளார்.ஆனால் 15-20 நிமிடங்கள் ஆக்ஸிஜன் உதவி இல்லாமல் இருந்ததால் அவருடைய நிலைமை மோசமாகியதால்., வெண்டிலேட்டரில் அனுமதிக்கப்பட்டார்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

.ஆனால், அவருக்கு கூடுதல் ஆக்ஸிஜன் உதவி தேவைப்படவே அவரை சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்த அவருக்கு நுரையீரல் செயலிழந்து விட்டதாக சென்னை மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதனையடுத்து நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே அவரைக் காப்பாற்ற முடியும் எனவும் கூறிவிட்டனர். அதற்கு குறைந்தது 1.5 கோடி செலவாகும் என்பதால், அவருடைய நண்பர்கள் நன்கொடை சேர்க்கத் தொடங்கியுள்ளனர்.

மற்றொரு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற தன்னுடைய உயிரையே பணயம் வைத்துள்ள இவரின் மனிதாபிமானமிக்க செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .சமூகவலைத்தளங்களில் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Related articles

Recent articles

spot_img