திருப்பதி தேவஸ்தான சேர்மன் சுப்பாரெட்டிக்கு கொரோனா; உடன் இருந்தவர்கள் டென்ஷன்!

Published:

subba-reddy
subba-reddy

திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டிக்கு கொரோனா தொற்று. அங்குள்ளவர்களுக்கு டென்ஷன்… டென்ஷன்…!

திதிதே சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியாவில் கொரோனா நோய் மிக அதிகமாக பரவி வரும் வேளையில் சாமானியனிலிருந்து பிரமுகர்கள் வரை இந்த வைரஸ் நோயால் தாக்கப்பட்டு வருகிறார்கள்.

அண்மையில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது.

அண்மையில் நடந்த திதிதே கூட்டத்தில் ஒய்வி சுப்பாரெட்டி பங்கு கொண்டார். அதனால் அவரை சந்தித்தவர்களிடம் கவலை பெருகி உள்ளது.

இந்த மாதம் 12ஆம் தேதி ஒய்வி சுப்பாரெட்டியின் தாயார் பிறந்த நாள் நடந்தது. அந்த விழா கொண்டாட்டங்களில் கூட அவர் பங்கு கொண்டு தாயின் ஆசீர்வாதத்தை பெற்றார். ஒய்வி சுப்பாரெட்டிக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என தீர்மானிக்கப்பட்டதால் அவருடைய தாயின் ஆரோக்கியம் பற்றிய கவலை ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

ஆந்திர பிரதேஷ் அறநிலையத்துறை அமைச்சர் வெல்லம்பல்லி ஶ்ரீனிவாஸ் கொரோனாவால் தாக்கப்பட்ட விஷயம் தெரிந்ததே. அவருக்கு இன்னும் நோய் குறையவில்லை. அதனால் அவருக்கு மேலான சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்சேர்த்துள்ளார்கள். செப்டம்பர் 28ம் தேதி வெல்லம்பல்லி ஸ்ரீநிவாசுக்கு கொரோனா பாசிடிவ் வந்ததாக முடிவாகியது.

அப்போதிலிருந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் 14 நாட்கள் கடந்தாலும் அவருக்கு இன்னும் நோய் குறையவில்லை. அதனால் புதன்கிழமையன்று மேலான சிகிச்சைக்காக ஹைதராபாதுக்கு அனுப்பினார்கள். அவர் கொரோனாவிலிருந்து இன்னும் குணம் அடையாததால் கட்சித் தலைவர்களும் குடும்ப அங்கத்தினர்களும் கவலை அடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேஷில் கோவிட் 19 பாதிப்புக்கு உள்ளானவர்கள் சென்ற மாதங்களோடு ஒப்பிட்டால் குறைந்ததாகவே தெரிகிறது.

அண்மையில் ஏபியில் 3592 கோவிட் கேசுகள் பதிவாகியுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள ஹெல்த் புலெடின் அறிவித்துள்ளது. இதனால் ஆந்திரா மாநிலத்தில் மொத்தம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 767465 க்கு சேர்ந்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் 24 மணிநேரத்தில் 32 பேர் இறந்து போய் உள்ளார்கள். இதனால் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6319ஐ எட்டியுள்ளது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

நேற்று வெளியிட்ட ஹெல்த் புலெடின் விவரங்களின்படி… மாநிலத்தில் மிக அதிகமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 607கேசுகள் பதிவாகி உள்ளன. அதன்பின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 518, அடுத்ததாக சித்தூர், கடப்பா மாநிலங்களிலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதாக தெரிகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img