புதுதில்லி:

கேரளாவில் மட்டுமல்லாமல் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘லவ் ஜிகாத்’ வழக்கில் தொடர்புடைய பெண் அகிலாவின் தந்தை அசோகன், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார். மேலும், நல்லவேளை என் குடும்பத்தில் ஒரு பயங்கரவாதி இருப்பது தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ஹிந்துப் பெண் அகிலா, முஸ்லிமாக மதம் மாற்றம் செய்யப்பட்டு ஒரு முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்தார். இதன் பின்னர் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. குடும்பத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. தன் மகள் ஏமாற்றப்பட்டது தொடர்பாக நீதிமன்றம் சென்றார் அகிலாவின் தந்தை அசோகன். இது தொடர்பாக விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அந்தத் திருமணத்தை, ‘லவ் ஜிகாத்’ எனக் கூறியதுடன், திருமணம் செல்லாது என்றும் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அகிலா என்கிற ஹாதியா என்ற அந்தப் பெண்ணிடம், நேற்று முன்தினம் விசாரணை நடத்தியது. அந்தப் பெண் தன் கணவருடன் செல்ல விரும்புவதாகத் தெரிவிதார்.. ஆனால், இரு தரப்பு வாதங்களையும் ஏற்றுக் கொண்ட பின், ஏற்கெனவே அந்தப் பெண் படித்து வத தமிழகத்தின் சேலத்தில் படிப்பைத் தொடரும்படி உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், அந்தப் பெண்ணின் காப்பாளராக கல்வி நிலையத்தின் தலைமையை நியமித்தது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இந்தத் தீர்ப்பு குறித்து அந்தப் பெண்ணின் தந்தை அசோகன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்துக் கூறியபோது, முஸ்லிமாக மதம் மாறிய உடன் ஷாபின் ஜகானை திருமணம் செய்த என் மகளை, மத்திய கிழக்கு நாடான சிரியாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். அவளது கணவருடன் அனுப்பியிருந்தால் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து, அவள் பயங்கரவாதி ஆகியிருப்பாள். என் குடும்பத்தில் ஒரு பயங்கரவாதி இருப்பது தவிர்க்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending