ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் மத்திய அமலாக்கத் துறையினர் சோதனை!
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகளில் இன்று காலை முதல் மத்தியன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏர்செல் – மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப் பட்டதாகத் தெரிகிறது. சென்னை, கோல்கட்டாவில் 6 இடங்களில் சோதனை நடந்தது. சென்னையில் 4 இடங்களிலும், கோல்கட்டாவில் 2 இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. சென்னையில் கைலாசம், ராம்ஜி நடராஜன், சுஜய் சுப்ரமூர்த்தி வீடுகளிலும், கோல்கட்டாவில் மனோஜ் மோகன்கா வீட்டிலும்…
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகளில் இன்று காலை முதல் மத்தியன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏர்செல் – மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப் பட்டதாகத் தெரிகிறது. சென்னை, கோல்கட்டாவில் 6 இடங்களில் சோதனை நடந்தது. சென்னையில் 4 இடங்களிலும், கோல்கட்டாவில் 2 இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
சென்னையில் கைலாசம், ராம்ஜி நடராஜன், சுஜய் சுப்ரமூர்த்தி வீடுகளிலும், கோல்கட்டாவில் மனோஜ் மோகன்கா வீட்டிலும் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய ஒப்புதல் தொடர்பாக சோதனை நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
Leave a Reply