25 ஆசிரியர்களுக்கு தொற்று! அதிர்ச்சியில் அரசு!

இந்தியா சற்றுமுன்
corona-test
corona

கர்நாடகாவில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் சற்று குறையத் தொடங்கியதை அடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளனர். ஆனால் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவது மிக அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலுக்கு இடையே கர்நாடகாவில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த 1ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனாலும் பள்ளியில் நோய் தொற்று ஏற்பட தொடங்கியுள்ளது.

பள்ளிகள் திறந்த 6 நாட்களே ஆகியுள்ள நிலையில் ஆசிரியர்களும் , மாணவ, மாணவிகளும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில், ஹாவேரி, சிக்கமகளூருவில் 3 ஆசரியர்களுக்கு கொரோனா ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் அந்த பள்ளிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.