கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து துறை அலுவலர் , மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு. தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதி 2012 அரசாணை படி சிறப்பு குழு அமைத்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மார்த்தாண்டம் சரகத்திற்குட்பட்ட 700 க்கும் மேற்ப்பட்ட பள்ளி வாகங்களை ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வுப்பணியை தக்கலை ஏ.எஸ்.பி.ஸ்ரீ அபினவ் துவக்கி வைத்து ஓட்டுனர்களுக்கு அறிவுரைவழங்கினார்.
தமிழகத்தில் உள்ள பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதி 2012 ன் அரசாணை படி வருடா வருடம் அந்தந்த மாவட்ட வடடார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் இன்று பள்ளி வாகனங்களுக்கான ஆய்வுப்பணி இன்று வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது வாகன சோதனையை தக்கலை உட்கோட்ட காவல் இணை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் துவக்கி வைத்து ஓட்டுனர்களுக்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீயணைப்பு கருவிகள் இயக்குவது குறித்து செய்முறை பயிற்சி வழங்ப்பட்டது.
நிகழ்ச்சியில் தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி ராஜ்மோகன உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




