விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் 17 பேர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராசாப்பாளையம் கிராமத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுப்பட்டதை தொடர்ந்து குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைகள் பணியில் ஈடுபட்டு வருதாக வந்த தகவலை அடுத்து கடலூர் மாவட்ட சார் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்க்கொண்டத்தில் 17 குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைகளை மீட்டு கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைகள் வைக்கப்ப்பட்டது தொடர்பாக கரும்பு விவசாயிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது




