தமிழகத்தில் கடந்த சிலதினங்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.இதன்காரணமாக அக்னீ நட்சத்திரகாலமான இப்போது வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் குளிர்ச்சியை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 3. மணியளவில் வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையில் தொடர் மழை காரனமாக புதுத்தோட்டத்தில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.தீயணைப்புத்துறையினர் இயந்திர வாள் மூலம் மரத்தை வெட்டி போக்குவரத்தை சீர் படுத்தி வருகின்றனர்.
இதனால் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.பேருந்துகள் சுற்றுலா வாகனங்கள் அணி வகுத்து நின்றவண்ணம் உள்ளது.சாலையின் ஓரத்தில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.




