பனாஜி, கோவா: தெற்கு கோவா கடல் பகுதியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று புதன்கிழமை இன்று காலை விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த 2 விமானிகள் மாயமாகியுள்ளனர். இதனைத் தேடும் பணியில் 9 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. கோவாவின் கர்வார் பகுதியில் 25 நாட்டிகல் மைல் தொலைவில் தாழப் பறந்து வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இந்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 3 பேர் இருந்தனர். அதில் இருந்த கமாண்டர் ஜோஷி, அங்கிருந்த மீனவர்களால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு பேரைக் காணவில்லை. மாயமான கடற்படை அதிகாரிகளின் நிலை குறித்து தகவல் இல்லை. அவகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 9 கப்பல் மற்றும் விமானப்படை விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மாயமான இருவரில் ஒருவர் விமானியும், ஒருவர் பயிற்சியாளருமாவார்.c
கோவா விமான விபத்து: தேடும் பணியில் 9 கப்பல்கள்
Popular Categories


