dog - 2026

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம், அம்பர்நாத் மேற்கு சங்கர் என்ற குடியிருப்பு பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் சுமேத் லோகர்.

இவர் நேற்று குடியிருப்பு வளாகத்தில் நண்பருடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மூன்று தெருநாய்கள் சிறுவன் துரத்தி உள்ளது.

நாய்களுக்கு பயந்து சிறுவன் அங்கிருந்து ஓடி போது கால் தவறி கீழே விழுந்தார். விரட்டி வந்த நாய்கள் கீழே விழுந்து கிடந்த சிறுவனை கடித்து குதறியது. இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறினார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து நாய்களை விரட்டி அடித்து. சிறுவனை மீட்டனர்
சிறுவனுக்கு முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

சிறுவனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து நடவடிக்கை எடுக்குமாறு அம்பர்நாத் நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending