கொரோனா: அக்‌ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியா சற்றுமுன் சினிமா
Akshay Kumar - 2026

நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் இன்று மருத்துவமனையில் அனுமதி.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமா நேற்று தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு தன்னை சமீப காலங்களில் சந்தித்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்களின் அறிவுரையின்படி நடிகர் அக்‌ஷய் குமார் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பது ” நான் மருத்துவமனையில் நலமுடன் இருக்கிறேன். மருத்துவர்கள் கூறும் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு பிராத்தனை செய்த அனைவர்க்கும் நன்றி. விரைவில் நான் வீடு திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.