என் அப்பா விட்டுடுங்க.. சிஆர்பிஎஃப் வீரரின் 5 வயது மகளின் கண்ணீர் வீடியோ!

Published:

crpf - 2026

தன் தந்தையை நக்சலைட்டுகள் விடுவிக்க வேண்டும் என சிஆர்பிஎஃப் வீரர் ஒருவரின் ஐந்து வயது மகள் கண்ணீர் மல்க காணொளி வெளியிட்டுள்ளார்.

ராகேஷ்வர் சிங் மின்ஹாஸ் 2011 இல் சிஆர்பிஎப்பில் சேர்ந்தார், அவர் கடந்த 10 ஆண்டுகளாக தேசத்திற்கு சேவை செய்து வருகிறார். அசாமில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன்புதான் சத்தீஸ்கருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சமீபத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நக்சலைட்துகள் நடத்திய தாக்குதலில் 2 2 வீரர்கள் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் அவர் காணமல் போனதால் சத்தீஸ்காரில் பதுங்கி இருக்கும் நக்சலைட்டுகளால் பிணைக்கைதியாக அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மின்ஹாஸ் இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதற்காக ஜம்முவில் உள்ள சிஆர்பிஎப் தலைமையகத்தை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சிகளை மேற்கொண்டதாக மின்ஹாஸின் மனைவி மீனு தெரிவித்துள்ளார். அவர் தனது குடும்பத்திற்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் தனது தந்தையை விடுவிக்க கூறி அவரது ஐந்து வயது மகள் வெளியிட்டுள்ள வீடியோவில், “நக்சலைட் அங்கிள் ப்ளீஸ் எங்க அப்பாவை விட்டுடுங்க” என கண்ணீரை துடைத்தவராறு தெரிவித்தது காண்போரின் கல் நெஞ்சையும் கரையவைத்துள்ளது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img