கொரோனா: கோலி தம்பதியர் 2 கோடி நிதி!

இந்தியா சற்றுமுன் விளையாட்டு
mr Mrs kholi
mr Mrs kholi

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 7 கோடி அளவுக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் விராட் கோலி.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி அவரது மனைவி 2 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4.12 லட்சமாக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 3,980 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதிக்காக கிரிக்கெட் வீரர்கள் பலரும் நன்கொடை அளித்துள்ளார்கள். இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து கொரோனா தடுப்புப் பணிகளுக்காக கேட்டோ அமைப்பின் வழியாக ரூ.7 கோடி நிதி திரட்டவுள்ளதாக தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இதன் முதற்கட்டமாக இருவரும் இணைந்து ரூ. 2 கோடி வழங்கியுள்ளார்கள்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.