
மதுரை விமான நிலையத்தில், மௌனம் காத்த ஒபிஎஸ்.
மதுரை விமான நிலையத்தில், சென்னையிலிருந்து விமானம் மூலம் வந்த ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறும் போது
என்.டி.ஏ. கூட்டணியில் தொடர்கிறீர்களா, என்ற கேள்வி கேட்டதற்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார் .
பின்னர், அவருடன் வந்த முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் செய்தியாளரிடம் என்ன கேள்வி கேட்டீர்கள் என்று விளக்கம் கேட்டார்.
அதற்கு என்.டி.ஏ.கூட்டணி குறித்து என சொன்னதும், செய்தியாளர் செல்போனில் தொடர்பு கொண்டு எம் டி ஏ கூட்டணி என்பது எனது காதில் இந்தியா கூட்டணி என்று விழுந்ததால், நான் பதிலளிக்காமல் வந்து விட்டேன் தேசிய ஜனநாயகர்கள் கூட்டணியில், பாஜக முறைப்படி கூட்டணி குறித்து அறிவித்த பின் எங்கள் நிலையை பற்றி நாங்கள் தெரிவிக்கின்றோம் என, ஓபிஎஸ் செல்போனில் பேசினார்.
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா அரசு தொடர்ந்து பாரபட்சமாக செல்வது குறித்த கேள்விக்கு:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுக்கின்ற செயல் அதனை இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதியாத, குலைக்கின்ற செயலாக தான் அது தெரிகிறது என்றார்.
பாஜக, அதிமுக கூட்டணி பற்றி கேட்டதற்கு, நல்லவர்களைப் பற்றிய நாம் பேசுவோம் எனக் கூறினார்
மேலும், அதிமுக பாஜக கூட்டணி விலகல் குறித்து, அல்லது பாஜக ஒபிஎஸ் கூட்டணியுடன் தொடர்வது குறித்து, நாளை மாலை பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர்களிடம் தெரிவிப்பதாக ஓபிஎஸ் கூறினார்.