அ.தி.மு.க.- தி.மு.க வுடன் பா.ம.க இனி எப்போதுமே கூட்டணி சேராது என பா.ம.க கட்சியின் சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அதிமுக
அன்புமணி ராமதாஸ் மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
வெற்றி பெற்ற அ.தி.மு.க., தி.மு.க.வினருக்கு எங்களது வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.சட்டசபையில் நாங்கள் இடம் பெறாவிட்டாலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பணியாற்றுவோம்.
பா.ம.க.வுக்கு மாநிலம் முழுவதும் 23 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர். ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் இத்தனை பேரும் பா.ம.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.நாங்கள் அரசியலை மக்கள் சேவையாக செய்து வருகிறோம். ஆனால் திராவிட கட்சிகள் அரசியலை வியாபாரமாக செய்கின்றனர்.
தோல்விகளால் நாங்கள் துவண்டு போய் விடவில்லை. முன்பை வேகமாக பணியாற்றுவோம்.தேர்தல் முடிவில் திராவிட கட்சிகள் வெற்றி பெற்றாலும் பண பலத்தினாலேயே வெற்றி பெற்று உள்ளார்கள். பா.ம.க. மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.
அ.தி.மு.க.- தி.மு.க வுடன் பா.ம.க இனி எப்போதுமே கூட்டணி கிடையாது. வருங்காலங்களிலும் பா.ம.க. தனித்தே போட்டியிடும். நலத்திட்டங்களை மறந்து பணத்துக்காக மக்கள் வாக்களித்தது வருத்தமாக உள்ளது என்று தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.



