தடுப்பூசி போட்டால் மட்டுமே ஊதியம்! உத்தரவு போட்டு அதிகாரிகள்!

இந்தியா சற்றுமுன்
money
money

சத்தீஸ்கர் மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் அடுத்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என உத்தரவு.

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனோ இரண்டாவது அலை காரணமாக மத்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைத்து முன்கள பணியாளர்களும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகின்றனது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கவுரல்லா பென்டர மார்வாகி மாவட்டம் முழுவதும் பழங்குடியினர் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இங்கு மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வசித்து வருகின்றனர்.

மேலும் அவர்கள் மூடநம்பிக்கை அச்சம், தயக்கம் உள்ளிட்டவை காரணமாக தடுப்பூசி போடுவதை தவிர்த்து வந்துள்ளனர். இதையடுத்து அரசு ஊழியர்களும் தடுப்பூசி குறித்து விலகவில்லை.

இந்நிலையில் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினர் மேம்பாட்டு துறை உயரதிகாரிகள் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

கொரோனோ தடுப்பு ஊசியை போட்டுக் போட்டுக் கொண்ட பிறகு அதற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே இத்துறையின் ஊழியர்களுக்கு அடுத்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.