மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு சிறப்பு விருது! WHO அறிவிப்பு!

இந்தியா சற்றுமுன்
Harshavardhan
Harshavardhan

புகையிலை கட்டுப்பாடு தொடர்பாக தனி நபர் அல்லது அமைப்புகள் செய்த பணிகளை பாராட்டி உலக சுகாதார அமைப்பு ஆண்டுதோறும் சிறப்பு விருது வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுஉலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, உலக சுகாதார அமைப்பு இயக்குநரின் சிறப்பு அங்கீகார விருது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு இந்தியாவில் இ-சிகரெட்டை ஒழிக்கவும், சூடுபடுத்தப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒழிக்கவும் சட்டம் இயற்றியதை பாராட்டும் வகையில் ஹர்ஷ் வர்தனுக்குஇந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.