பிச்சை எடுத்து வாழ்ந்த மூதாட்டி! வீட்டில் கிடைத்த ரூ.2.60 லட்சம்!

இந்தியா சற்றுமுன்
money 1
money 1

ஜம்மு மற்றும் காஷ்மீரின் நவ்சேரா மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் 30 ஆண்டுகளாகப் பிச்சையெடுத்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், ரஜோரி மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லத்திலிருந்து ஒரு குழு இவரது குடிசை வீட்டிற்குச் சென்றுள்ளது. அதன்பின் அவரை முதியோர் இல்லத்திற்கு நேற்று அழைத்துச் சென்றுள்ளது.

இந்நிலையில், நகராட்சி பணியாளர்கள் அவரது குடிசையில் கிடந்த குப்பைகளை எடுக்கச் சென்றுள்ளனர். அந்த குடிசை வீட்டின் குப்பைத் தொட்டியில் கரன்சி நோட்டுகள் கவரில் சுற்றி வைக்கப்பட்டுக் கிடந்துள்ளன. ஒரு பையில் 70 முதல் 80 கிலோ எடை கொண்ட நாணயங்களும் இருந்துள்ளன.

இதுபற்றி அந்த பகுதி வார்டு உறுப்பினர் ஒருவர் கூறும்பொழுது, “இது மோசடி செய்து கிடைத்த பணமல்ல.

அருகிலுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் இவரிடம் ரூ.10 அல்லது ரூ.20 எனக் கொடுத்து விட்டுச் செல்வார்கள். கடந்த 30 ஆண்டுகளாக அவர் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் வரை பணம் சேர்த்துள்ளார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

தனது கடின உழைப்பினாலேயே அவருக்கு இது சாத்தியப்பட்டு உள்ளது. எனினும், எவ்வளவு பணம் உள்ளது என்று எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டரை மணிநேரம் முதல் 3 மணிநேரம் வரை பணம் எவ்வளவு உள்ளது என்று எண்ணியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.