vaccine - 2026

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுதும், 18 – 44 வயதுக்குட்பட்டோர், தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாகச் சென்று கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் வகையில் ‘கோவின்’ என்ற இணையதளத்தில் புதிய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

ஆனால், கிராமப்புறங்களில் பலர் தடுப்பூசி போடுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர. என புகார் எழுந்தது. இதனையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு அல்லது நியமனம் முன்பதிவு செய்வது கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்தது.

18- 44 வயதினர் நேரடியாக அருகிலுள்ள தடுப்பூசி மையத்திற்குச் செல்லலாம், அங்கு தடுப்பூசி செய்பவர் இடத்திலேயே பதிவுசெய்து அதே வருகையின் போது தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஜூன் 13 ஆம் தேதி நிலவரப்படி, கோ வின் பதிவு செய்யப்பட்ட 28.36 கோடி பயனாளிகளில், 16.45 கோடி (58%) பயனாளிகள் ஆன் சைட் பயன்முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

மேலும், ஜூன் 13, 2021 வரை கோ வின் பதிவு செய்யப்பட்ட மொத்த 24.84 கோடி தடுப்பூசி அளவுகளில், 19.84 கோடி அளவுகள் (அனைத்து தடுப்பூசி அளவுகளிலும் கிட்டத்தட்ட 80%) ஆன்சைட் / மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending