விதிமுறைகள்: சிக்கலில் ட்விட்டர்!

twitter
twitter

சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி ஒருசாரார் தொடர்ந்து கோரிக்கை விடுத்தது வந்தனர். அதேபோல் ஓடிடி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, சமூகவலைதளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் புதிய விதிகளை அறிவித்தது. இந்தப் புதிய விதிகளை ஏற்றுக் கொள்வதற்கான அவகாசம் கடந்த 26ஆம் தேதியோடு முடிவடைந்தது.

சமூகவலைதளங்களில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்றுக் கொண்டுள்ளன.

ட்விட்டர் நிறுவனம் மட்டும் விதிகளை முழுமையாக ஏற்கவில்லை. சமூகவலைதளங்கள், தலைமை இணக்க அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்; நிறுவன ஊழியர் ஒருவரை குறைதீர்க்கும் அதிகாரியாக நியமிக்க வேண்டும்;

நோடல் தொடர்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பன மத்திய அரசின் விதிமுறைகளில் ஒன்றாகும். இதில் ட்விட்டர் இன்னும் தலைமை இணக்க அதிகாரியை நியமிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து அண்மையில் மத்திய அரசு, ட்விட்டர் நிறுவனத்துக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில் “நல்லெண்ண நடவடிக்கையாக, விதிகளுக்கு உடனடியாக இணங்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு கடைசி அறிவிப்பு வழங்கப்படுகிறது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இணங்கத் தவறினால், 2000ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஐ.டி சட்டத்தின் 79ஆம் பிரிவின்கீழ் ட்விட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்படும் விலக்குத் திரும்பப் பெறப்படும். மேலும் தண்டனைச் சட்டம் பாயும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நோட்டீஸ் தொடர்பாக அண்மையில் விளக்கமளித்த ட்விட்டர் நிறுவனம், புதிய விதிகளுக்கு இணங்குவது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறியது.

இந்தநிலையில், ட்விட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சட்டப்பாதுகாப்பு, அதாவது ஐ.டி சட்டத்தின் 79ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள விலக்கை மத்திய அரசு திரும்பப் பெறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை இந்த சட்டப்பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டால், பயனர்களின் கருத்துக்கு ட்விட்டர் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும். மேலும் பயனர்களின் கருத்துக்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories