hariyana1
hariyana1

யமுனா நகர் பகுதியில் அப்பா வயதில் இருக்கும் ஒரு முதியவருக்கு மூன்று பெண்களால் நடந்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் யமுனா நகர் பகுதியில் முதியவர் ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரது மகன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். மகள் திருமணம் ஆகி கணவர் வீட்டிற்கு சென்று விட்டார்.

மகன் வெளிநாட்டில் இருப்பதால் அவரிடம் பணப்புழக்கம் இருந்துள்ளது. இதனை அறிந்த மூன்று பெண்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தனர்.

அதாவது, முதியவர் வீட்டுக்குள் போலீசார் உடையில் புகுந்த 3 பெண்கள், வீட்டில் இருந்த முதியவரை ஆடைகளை கழற்றும்படி மிரட்டியுள்ளனர். பின்னர், முதியவரை நிர்வாணமாக வீடியோ எடுத்த அப்பெண்கள் அதனை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பணம் தரவில்லை என்றால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவோம் என அவரிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய அப்பெண்கள், முதல்கட்டமாக 50 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளனர். அவர்கள் சென்றதும் முதியவர் இது குறித்து யமுனா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!
hariyana
hariyana

அதில், வீட்டில் தனியாக தான் வசித்து வருவதாகவும் போலீஸ் உடையில் முதலில் ஒரு பெண் வந்ததாகவும் அடுத்த 5 நிமிடத்தில் 2 பெண்கள் வந்து தங்களை போலீசார் என கூறி, தனது உடையை களைய கூறிமிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் நடந்த விசாரணையில் அவர்கள் போலி போலீசார் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் முதியவரை மிரட்டி பணம் பறித்த 3 பெண்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending