ஆன்லைன் வகுப்பு முடிந்ததும் ஆபாச படம் பார்த்த விவகாரத்தில், 15 வயது சகோதரியை 13 வயது சகோதரன் கர்ப்பமாக்கிய சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், செல்போனில் குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதால், அவர்கள் ஆபாச, தேவையற்ற தகவல்களை பார்க்கும் வாய்ப்புக்கு தள்ளப்பட்டு சீரழிந்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சகோதரன் தனது 15 வயது சகோதரியுடன் செல்போனில் ஆபாச வீடியோவைப் பார்த்த பின்னர், இருவரும் உடலுறவு கொண்டதில் தற்போது சிறுமி கர்ப்பமான சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து பிவாடி போலீசார் கூறுகையில், ‘மகாராஷ்டிரா மாநிலம் வர்தா அடுத்த சேவாகிராமை சேர்ந்த தொழிலாளியின் குடும்பம் பிவாடியில் வசித்து வருகிறது. இவர்களது 13 வயது மகனும், 15 வயது மகளும் ஆன்லைன் மூலம் பள்ளி படிப்புகளை கற்றுவந்தனர்.
இருவரும், ஒன்றாக சேர்ந்து மொபைல் போனில் படித்து வந்த நிலையில், அவ்வப்போது ஆபாச படங்களை பார்த்துள்ளனர். அதன்பின், இருவரும் ஆபாச படங்களில் வரும் காட்சிகளை பார்த்து உடலுறவு கொண்டுள்ளனர். சில மாதங்களுக்குப் பிறகு, சிறுமியின் பாட்டி பிவாடிக்கு வந்தார்.
தனது பேத்தியின் வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து குழப்பமடைந்தார். அதற்கேற்றால் போல் சிறுமியும் அவ்வப்போது வாந்தி எடுத்துவந்தார். அடிக்கடி சோர்ந்த நிலையில் படுத்தே இருந்தார். சந்தேகமடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் அவளது சகோதரன் என்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து சகோதரன் மற்றும் பாதிக்கப்பட்ட சகோதரி ஆகிய இருவரின் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சகோதரன், சகோதரி ஆகிய இருவருக்கும் குற்றம் குறித்தும், குழந்தை பெறுதல் குறித்து எந்த புரிதலும் இல்லாததால் தற்போது சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகள் வீட்டில் ஆன்லைனில் படிக்கும் போது, பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது என்கின்றனர்.