snake 1 - 2026

கடந்த சில காலங்களாக மிருகங்களை மனிதர்கள் துன்புறுத்தும் பல கொடூர நிகழ்வுகள் நடந்து கொண்டே உள்ளது.

பொதுவாகவே வன விலங்குகள் என்றவுடன் நமது நினைவிற்கு வருவது, யானை சிங்கம் புலிகள் தான். ஆனால் காட்டில் வசிக்கும் பட்டாம்பூச்சி முதல் தவளை வரை அனைத்தும் சேர்ந்து தான் நாம் அதை வனம் என்று அழைக்கிறோம்.

அநேகருக்கு வனம் என்பதை குறித்து எந்த ஒரு விழிப்புணர்வும் புரிதலும் இல்லாமல் உள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

அந்த வீடியோவை பர்வீன் தபாஸ் என்ற நடிகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்ட அந்த வீடியோவில் ராஜநாகம் ஒன்றை இரண்டு நபர்கள் சேர்ந்து துன்புறுத்தும் காட்சி பெறும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் ஓரமாக உள்ள வனத்தில் இருந்து இழுத்து வரப்படடும் ராஜநாகத்தை, ப்ளாஸ்டிக் சாக்குப் பையில் வைத்து அடைத்து, அதன் உடலில் ஏறி மிதிக்கும் காட்சிகள் மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி… அழைக்கிறார் மோதிஜி!

கோவாவில் நடைப்பெற்ற இந்த நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மக்களுக்கு வனம் குறித்தும் வன விலங்குகள் குறித்தும் போதுமான விழிப்புணர்வை வழங்குவது அவசியம் என்று நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

snake 1 1 - 2026

அந்த ராஜநாகம் பத்திரமாக மீட்கப்பட்டு தற்போது பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அதனை துன்புறுத்திய நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

King Cobra, Monocled Cobra, Spectacled Cobra and Russell’s Viper போன்ற பாம்புகள், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 இன் அட்டவணை II இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.

இந்த ஊர்வன இனங்களுக்கு துன்புறுத்தல் தரும் வகையில் நடந்து கொண்டால் மூன்று முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் வரையில் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending