அடுத்த ஸ்மார்ட் போன் செப்டம்பர் 10இல்..! முகேஷ் அம்பானி!

ambani reliance
ambani reliance

கூகுளுடன் இணைந்து மலிவு விலையில் ஜியோ ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 24) நடைபெற்றது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து உருவாக்கியுள்ள ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார்.

இது குறித்து முகேஷ் அம்பானி கூறியதாவது: இந்தியாவின் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனாக இது இருக்கும். புதிய ஸ்மார்ட்போன் மூலம் இந்தியாவில் 2ஜி சேவையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

இத்துடன் நாட்டில் முழுமையான 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக கூகுள் க்ளவுட் தொழில்நுட்பத்துடன் கூடிய 5ஜி சேவையை வழங்க முடிவு செய்துள்ளோம்.

5ஜி-க்கு விரைவாகவும், தடையின்றி மேம்படுத்தவும் ஜியோ தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 5ஜி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க, உலகளாவிய கூட்டாளர்களுடன் இணைந்து 5ஜி சாதனங்களை உருவாக்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன், வரும் விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 10ம் தேதி விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கூகுளின் ஆண்ட்ராய்டு வெர்ஷனை கொண்டிருக்கிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது. மற்ற அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து பேசிய கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, ‛இந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்காக புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவது மற்றும் தொழில்நுட்பத்துடன் வணிகங்களை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.

4ஜி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணியில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் வெளிவரும்.’ எனக் கூறினார்.
ஜியோ பல்கலைக்கழகம்

முன்னதாக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும், முகேஷ் அம்பானியின் மனைவியுமான நீடா அம்பானி பேசியதாவது:

ரிலையன்ஸ் அறக்கட்டளையால் நவி மும்பையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

ஜியோ பல்கலைக்கழகம் தனது முதல் கல்வியாண்டில், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், டிஜிட்டல் மீடியா மற்றும் இளங்கலை பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் தொடர்பு ஆகிய பாடப்பிரிவுகளை துவங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories