Panchayat - 2026

ஒரு பெண்ணை கெடுத்தவருக்கு செருப்படி கொடுத்து தீர்ப்பு சொன்ன ஒரு ஊர் நாட்டாமையால் போலீஸ் அதிர்ச்சியடைந்துள்ளது

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மகாராஜ்கஞ்சில் உள்ள கிராமத்தில் ஒரு 15 வயதான பெண்ணை அந்த ஊரை சேர்ந்த ஒரு இளைஞர் பலாத்காரம் செய்துவிட்டார்.

அதனால் அந்த பெண்ணின் தாயார் அந்த பெண்ணை கெடுத்தவர் மீது அந்த ஊர் நாட்டாமையிடம் புகார் கொடுத்தார். அந்த ஊர் பஞ்சாயத்து கடந்த வாரம் கூடியது.

அப்போது அந்த நாட்டாமை அந்த பெண்ணை கெடுத்த இளைஞரையும் அந்த பெண்ணையும் விசாரித்தார். அப்போது அந்த இளைஞரின் குற்றம் ஊர்ஜிதமானது. உடேன அந்த நாட்டாமை ஒரு தீர்ப்பை வழங்கினார்.

அந்த பெண்ணை கூப்பிட்டு அந்த இளைஞரை ஐந்து முறை செருப்பால் அடிக்க சொல்லி விட்டு பஞ்சாயத்தில் 50000 ரூபாய் அபராதம் கட்ட சொல்லி தீர்ப்பு வழங்கினார் .

அதன் பிறகு அந்த பெண் அவரை ஐந்து முறை செருப்பால் அடித்தார். அதன் பிறகு இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ ஊடகத்தில் வைரலானது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி… அழைக்கிறார் மோதிஜி!

அதை பார்த்த பலரும் கடும் கணடனம் தெரிவித்தனர். பின்னர் இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

போலீசார் அந்த ஊருக்கு வந்து, அந்த பெண்ணை மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பினர். பிறகு அந்த பெண்ணை கெடுத்தவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending