rengasamy 1 - 2026

ரங்கசாமி என்ற நபர், ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை சேர்ந்தவர். இவர் வேலை தேடுவது போல நாடகமாடி ஐதராபாத்தில் உள்ள லாலகுடா பகுதியில் வசித்து வந்துள்ளான்.

அங்கு தங்கிய ரங்கசாமி வேலை தேடுவதை மறந்துவிட்டு, அக்கம் பக்கத்தில் வசிக்கும் திருமணமான பெண்களை தன் மீது காதலில் விழ வைத்துள்ளான்.

அப்படி தன்னை காதலிப்பதாக முன் வந்த பெண்களிடம் இருந்து அவர் காசு மற்றும் நகைகளை ஏமாற்றி வாங்கி, பிழைப்பை நடத்தி வந்துள்ளார்.

சிரிக்க சிரிக்க பேசினால் பெண்கள் எளிதில் காதலில் விழுந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில், அறிமுகமாகும் பெண்களிடம் எல்லாம் அப்பாவித்தனமாக கோமாளி போல பேசி அவர்களின் நட்பை பெற்று, அவர்களது வீடுகளுக்கு சென்று அவர்களது ஆடைகளை அணிந்து கொண்டு பெண் போல வேடமிட்டு அவர்களை சிரிக்க வைத்து மயக்கி உள்ளான்.

தனது காதல் வலையில் சிக்கும் பெண்களிடம் பாலியல் இச்சையை தீர்த்துக் கொண்டு நெருக்கமாக புகைபடம் எடுத்து வைத்து, அதனை வைத்து மிரட்டி பணம் பெறுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளான்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

ஒரு பெண்ணிடம இருந்து எவ்வளவு பணம் பறிக்க முடியுமோ அவ்வளவு பணம் பறித்து விட்டு, அடுத்த பெண்ணிடம் செல்வதையே இவன் வாடிக்கையாக வைத்துள்ளான்.

rengasamy - 2026

லாலகுடாவில் இதேபோல் ஒரு பெண்ணை ஏமாற்றியதாக ரங்கசாமி மீது காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரங்கசாமி மீது வழக்கு பதிவு செய்து அவனை விசாரித்த போது அவன் மீதுள்ள வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்தது.

தனது மோசடி வேலைக்காக திருமணம் ஆன நன்றாக சம்பாதிக்கும் சில திருமணமான பெண்களிடம் நண்பன் போல பேசி பழகி, கணவன் மனைவிக்கிடையே சண்டையை ஏற்படுத்தி கணவரிடம் இருந்து விவாகரத்து செய்ய வைத்து அந்த பெண்களிடம் பணம் பறித்த கொடுமையை எல்லாம் நிகழ்த்தியுள்ளான்
லேடி கெட்டப் ரங்கசாமி.

10க்கும் மேற்பட்ட குடும்ப பெண்களின் வாழ்க்கையில் சீரழித்த ரங்கசாமி, ஐதராபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கோவாவுக்கு ஹனிமூன் டிரிப் சென்றபோது அங்கு வைத்து ஹைதராபாத் போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending