iphone
iphone

துபாயலிருந்து ஆடைகள் எனக்கூறி கொரியாரில் அனுப்பப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடைகள் என கூறி பொட்டலம் ஒன்று தில்லியில் உள்ள புதிய கொரியர் அலுவலகத்துக்கு வந்தது.

அதனை அதிகாரிகள் எக்ஸ் ரே ஸ்கேன் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அதில் விலை உயர்ந்த ஐபோன் 12 ப்ரோ மாடல் வகை செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 90 செல்போன்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அதனை அனுப்பியது யார், யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending