kerala - 2026

கேரளாவில் லிப்ட் தருவதாக கூறி மனநல பிரச்சினை கொண்ட இளம்பெண்ணை பேருந்துக்குள் வைத்து சீரழித்த மூன்று கொடூரன்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோட்டை சேந்த 21 வயதான பெண்ணுக்கு சில காலமாக மன நல பிரச்சினை இருந்துள்ளது.

இதையடுத்து அடிக்கடி வீட்டில் இருந்து தனியாக வெளியில் செல்லும் அப்பெண் பின்னர் யாரிடமாவது லிப்ட் கேட்டு வீட்டுக்கு திரும்பி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதே போல நேற்று முன் தினம் தாயாருடன் சண்டை போட்டு கொண்டு அவர் வெளியில் சென்றிருக்கிறார். பின்னர் வழக்கம் போல வீடு திரும்ப சாலையில் சென்ற வாகனத்தை கைகாட்டி லிப்ட் கேட்டிருக்கிறார்.

vankodumai - 2026

அப்போது இரண்டு பைக்கில் மூன்று பேர் வந்த நிலையில் பைக்கை நிறுத்தி அதில் ஏறி கொள்ளுமாறு பெண்ணிடம் கூறினர்.

அவரும் ஏறிய நிலையில் நேராக காலி பேருந்து நிற்கும் இடத்திற்கு சென்றிருக்கின்றனர்.

இதன்பின்னர் மாறி மாறி அவரை பலாத்காரம் செய்து ஆட்டோ ஸ்டாண்டில் விட்டு சென்றனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த அப்பெண் தனது தாயாரிடம் ரூ 300ஐ காட்டினார், ஏது இந்த பணம் என தாய் கேட்டதற்கு, மூன்று பேர் என்னை பலாத்காரம் செய்துவிட்டு இந்த பணத்தை கொடுத்தனர்.

நாளையும் என்னை வர சொன்னார்கள் என கூற தாயார் அதிர்ந்து போனார். இது குறித்து அவர் போலிசில் புகார் அளித்த நிலையில் குற்றவாளிகளான கோபீஷ் (38) மற்றும் முகமத்டு ஷமீர் (32) ஆகிய இருவரை கைது செய்தனர்.
மூன்றாவது குற்றவாளியை போலிசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending