finger - 2026

மும்பையைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவர் மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்ததாக செசன்ஸ் கோர்ட் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த இளைஞர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், பெண்ணுடன் நான் உடலுறவு கொள்ளவில்லை.

அப்படி இருக்கும்போது அதை எப்படி கற்பழிப்பு என்று கூறுவது. நான் அந்த பெண்ணை தொட்டேனே தவிர உடலுறவு கொள்ளவில்லை. அதை கற்பழிப்பு என்று கூற முடியாது என தெரிவித்திருந்தார்.

நீதிபதி ரேவதி மோகிதே அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், தடயவியல் ஆய்வில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சம்பந்தப்பட்ட குற்றவாளிதான் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார் என்பதை உறுதி செய்யும் ஆதாரங்களும் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

மேலும் உடல் உறவு வைக்காமல் விரலால் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதும் கற்பழிப்பு தான். அதுவும் கற்பழிப்பு சட்டத்தின் கீழ் தான் வரும் என்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளனர்.

மேலும் அந்த இளைஞருக்கு கீழ் கோர்ட் வழங்கிய தண்டனையை உறுதியும் செய்திருக்கிறது மும்பை உயர்நீதிமன்றம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending