murder-1
murder-1

எச்.டி வெங்கடராஜா என்ற நபர், கர்நாடகாவின் மைசூருவில் வசித்து வந்துள்ளார். கார்ப்பரேஷனில் குரூப் டி ஊழியராக பணியாற்றி வரும் இவருக்கு உமா என்ற பெண் ஒருவருடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது.

இருவருக்கும் 20 வயது வித்தியாசம் உள்ள நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். வயது வித்தியாசம் அதிகம் உள்ள நிலையில், இந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, உமா தனது முன்னால் காதலனான அவினாஷ் என்ற நபரை சந்தித்துள்ளார்

இதனையடுத்து, இருவரும் கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதன் பிறகு இந்த உறவு பற்றி அந்த உமாவின் கணவருக்குத் தெரிந்து விட்டதால் அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

அதனால் அந்த உமாவும் அவரின் காதலனும் சேர்ந்து அந்த கணவரை கொலை செய்ய முடிவெடுத்தனர். அதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கணவருக்கு மயக்க மருந்து கலந்த காப்பியை கொடுத்து மயங்க செய்தார்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

பிறகு அவரின் பிறப்புறுப்பை நசுக்கி கொலை செய்து விட்டார். அதன் பிறகு அவர் தலைவலியால் இறந்து விட்டதாக ஊராரிடம் கூறி அவரை அடக்கம் செய்தனர். ஆனால் அவரின் சகோதரர் போலீசில் புகாரளித்ததை அடுத்து, போலீசார் இறந்தவரின் பிணத்தை தோண்டி பரிசோதனை செய்த போது அவரின் பிறப்புறுப்பை சேதப்படுத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் உமாவை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending