woman3
woman3

வரதட்சணை கொடுமையால் கேரளாவில் இளம்பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய எடுத்திருக்கும் நிலையில் ராஜஸ்தானில் வரதட்சணை கொடுமையினால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் பாகூரைச்சேர்ந்தவர் பைருலால். இவரின் மகள் பிரியாவுக்கும் பந்திர் பகுதியைச் சேர்ந்த முகேஷ் சான்சிக்கும் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பின்னர் பிரியாவிடம் வரதட்சணை கேட்டு முகேஷ் சான்சியின் பெற்றோர் கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் கணவரின் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார் பிரியா.

சில நாட்கள் கழித்து முகேஷ் சான்சி பெற்றோர் பிரியாவிடம் சமாதானம் பேசி அவரை மீண்டும் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் வீட்டிற்கு சென்ற பின்னர் எப்போதும் போல் பிரியாவிடம் வரதட்சணை கேட்டு மீண்டும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்த வரதட்சணை கொடுமையின் உச்சகட்டமாக பிரியாவை மாமனாரின் முன்னால் நிர்வாண படுத்தியிருக்கிறார் மாமியார்.

ALSO READ:  தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இந்த அவமானம் தாங்காமல் பிரியா விஷம் குடித்ததால், கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பிரியா ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் வரதட்சணை கேட்டு கணவர் குடும்பம் என்னை ரொம்ப சித்திரவதை செய்தார்கள். கொடுமைப்படுத்தினார்கள்.

மாமனார் முன்னிலையிலேயே நிர்வாணப்படுத்தியதால் அவமானம் தாங்காமல் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று பேசியிருக்கிறார்.

இந்த வீடியோவை ஆதாரமாக வைத்துக் கொண்ட போலீசார் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending