பிரதமரின் கோரிக்கையை நிறைவேற்றிய தெலுங்கு இளைஞர்! 1000 பக்கங்களை 20 நொடியில் மொழிபெயர்த்து..!

இந்தியா லைஃப் ஸ்டைல்
telugu youth translating
பிரதமரின் உத்தரவை நிறைவேற்றிய தெலுங்கு இளைஞர்.
  • 1000 பக்கங்கள் கொண்ட நூலை 20 நொடிகளில் மொழிபெயர்க்க முடியும்.
  • பிரதமரின் உத்தரவை நிறைவேற்றிய தெலுங்கு இளைஞர்.
  • ஏஐசிடிஓ ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டிரன்ஸ்லேஷன் டூல் வெளியிடுவதில் முக்கிய பங்காற்றினார் புத்தா சந்திரசேகர்.

பிற மொழிகளில் உள்ள நூல்களைப் படிப்பதும் அவற்றை புரிந்து கொள்வதும் மிகவும் கடினமான வேலை. அதற்காக அவற்றின் மொழிபெயர்ப்பு வரும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இந்த சூழ்நிலை மிகவும் வருத்தம் அளிப்பதாக இருப்பதாகவும் ஒரே கணத்தில் மொழிபெயர்க்கும் தொழில்நுட்பத்தை வளர்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி மத்திய கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

டெல்லியில் உள்ள ஏஐசிடிஓ முதன்மை ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணிபுரிந்து வரும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த புத்தா சந்திரசேகர் பிரதமரின் உத்தரவுக்கு ஏற்ப இந்த மொழிபெயர்ப்பு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தீர்மானித்தார். இன்ஜினியரிங் பட்டம் பெற்ற இவர் அமெரிக்காவில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

கடந்த ஆறு மாதங்களாக மூன்று இன்ஜினியரிங் மாணவர்களோடு சேர்ந்து ஏஐசிடிஓ ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டிரன்ஸ்லேஷன் டூல் என்பதை வடிவமைத்தார்.

எத்தனை பெரிய புத்தகம் ஆனாலும் செயற்கை அறிவு மூலம் ஒரே கணத்தில் மொழிபெயர்க்கும் இந்த டூலை பிரதமர் மோடி வியாழனன்று வெளியிட்டார்.

இது 90% சரியாக எப்படிப்பட்ட நூலானாலும் 12 மொழிகளில் மொழிபெயர்க்கக் கூடியது. சுமார் 1000 பக்கங்கள் உள்ள ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பதற்கு 20 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது.

இந்த சாப்ட்வேர் உதவியோடு ஆங்கிலத்திலிருந்து ஹிந்தி, ஓடியா, தெலுங்கு, தமிழ், மராத்தி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி, அஸ்ஸாமி, உருது, பஞ்சாபி மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடியும். இந்த 12 மொழிகளில் எந்த மொழியில் இருக்கும் நூல் ஆனாலும் மீதியுள்ள மொழிகளுக்கு கண நேரத்தில் மொழிபெயர்க்க முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.