ஆன்லைன் ஜாப் தேடுபவரா நீங்கள்? உஷாருய்யா உஷார்!

Published:

online job
online job

இணையதளங்களில் வேலைதேடுவோருக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. பணம் வசூலித்து மோசடி செய்பவர்களிடம் விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்ற நோக்கில் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

ஆன்லைனில் வேலை தேடுவோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மக்கள் பலர் இப்போது தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலைகளை Naukri, indeed, linkedin போன்ற வேலைவாய்ப்பு தளங்களில் தேடுகிறார்கள். மேலும் தங்களை பற்றிய விவரங்களை அதில் பதிவிட்டு வைத்துள்ளார்கள்.

இந்த தகவல்களை பார்க்கும் சிலர், அவர்களை ஹெச்ஆர் மேனேஜர் என்று கூறி ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது

பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கிறதே என்ற ஆசையில் சிறிய தொகை தானே அனுப்பிவிடும் என்று ஏமாறும் மக்கள் அதிகரித்து வருகிறார்கள்.

எனவே இவர்களை எச்சரிக்கும் வகையில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது,

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: Naukri போன்ற வேலைவாய்ப்புக்கான இணையதளங்களில் வேலை வேண்டி பதிவு செய்வோரை குறிவைத்து மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது.

வேலைவாய்ப்புக்காக http://naukri.com போன்ற இணைய தளங்களில் வேலை தேடுவோர் தங்களை பற்றிய முழு விபரங்களையும் அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வைக்கிறார்கள்.

அதனை பார்வையிடும் மோசடி நபர்கள் பிரபல நிறுவனங்களில் இருந்து தொடர்பு கொள்வதாக பொய்யாக கூறி வேலை தேடுவோரை தொடர்பு கொண்டு பிரபல நிறுவனங்களின் HR மேனேஜர் பேசுவதாகவும் கூறி நம்ப வைத்து Interview செய்வது போல் நடித்து ஏமாற்றி Registration fees, Processing fees, Verification fees என பல வகைகளில் பணம் பெற்று மோசடி செய்து விடுகிறார்கள்.

வேலை தரும் பெருநிறுவனங்கள் எக்காரணம் கூறியும் தாங்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கும் நபர்களிடம் பணம் வசூலிப்பதில்லை.

எனவே பிரபல நிறுவனங்களில் இருந்து வேலைவாய்ப்புக்காக உங்களை தொடர்புகொண்டு பேசுவதாக கூறினால் அந்த நிறுவனங்களை முடிந்தவரையில் அவர்களை நேரடியாக தொடர்புகொண்டோ, உங்களது நண்பர்கள் மூலமாக தொடர்புகொண்டோ அங்கு குறிப்பிட்ட பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை நடைபெறுகிறதா என்பது பற்றி முழுவிபரமும் சேகரியுங்கள்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

மேலும் அந்நிறுவனத்தின் Official Website மூலமாக நிறுவனத்தை தொடர்பு கொண்டும் ஆட்சேர்க்கை பற்றி விசாரணை செய்து கொண்டு மோசடி நபர்களிடம் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img