old man - 2026

அடுத்த கேப்டன் இவர்தான்..! மட்டையை சுழற்றி பட்டையைக் கிளப்பும் பேட்ஸ்மேன்! வைரல்!

இந்தியா அடடே... அப்படியா? விளையாட்டு
old man - 2026

கிரிக்கெட் என்றாலே எல்லோருக்கும் ஒரு ஈர்ப்பும் குவியும் உண்டு. உள்ளூர் மைதானத்தில்(நாம் ஆடின அதுதான் மைதானம்) வயது வித்தியாசம் இன்றி மட்டை சுழற்றி தங்கள் ஆசையை தீர்த்துக்கொள்வார்கள்.

தற்போது இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் வீடியோ,. ஊர் இளைஞர்கள் புடை சூழ்ந்திருக்கும் இடத்தில் தாத்தா ஒருவர் செம எனர்ஜியுடன் விளையாடுகிறார்.

பந்தை தூக்கியடிக்கும் அவர், சிக்சர் அடித்ததுபோல் துள்ளிக் குதிக்கிறார். அவர் பந்தை அசால்டாக அடிப்பது, சுற்றியிருக்கும் இளைஞர்களுக்கும் குஷியை ஏற்படுத்திருகிறது.

அவர் பந்தை அடித்ததைக் காட்டிலும், அந்தப் பந்தை அடித்துவிடும் அவர் செய்யும் ரகளை தான் செம ஹைலட். டிவிட்டரில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும், இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன், விராட் கோலி மற்றும் பிசிசிஐ டேக் செய்து இந்திய அணிக்கான அடுத்த கேப்டன் கிடைத்துவிட்டார் என நக்கலாக எழுதியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.