ahamed - 2026

தலைகீழாக தேசியக்கொடியை ஏற்றிய அமைச்சர்!

இந்தியா
ahamed - 2026

கேரளாவில் அமைச்சர் ஒருவர் குடியரசு தினத்தில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று இந்தியா முழுவதும் 73 ஆவது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் கேரளாவில் உள்ள துறைமுகம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக அகமது தேவர்கோயில் என்பவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

அப்போது தேசியக்கொடி தலைகீழாக பறந்தது. இதனை அமைச்சர் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக பார்த்தாலும் அதனை கீழே இறக்கி மீண்டும் சரியாக தேசியகொடியை ஏற்ற வில்லை என்று கூறப்படுகிறது.

பின்னர் ஊடகவியலாளர்கள் தவறைச் சுட்டிக்காட்டிய பின் அதிகாரிகள் கொடியை இறக்கி சரியான முறையில் ஏற்றினர்

தேசிய கொடியை தலைகீழாக ஒரு அமைச்சரே தலைகீழாக ஏற்றி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.