செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து!

இந்தியா சற்றுமுன்

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோர் உரிமம் நிரந்தர ரத்து செய்யப்படும். இது இங்கல்ல, மேற்கு வங்கத்தில்! இது தொடர்பாக, மேற்கு வங்க அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோரின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அரசு உத்தரவிட்டுள்ளது. மீண்டும் அவர்களுக்கு உரிமம் அளிக்காததுடன், அபராதத்துடன் ஆறு மாத சிறை தண்டனையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற உத்தரவு இந்தியாவின் முதல் மாநிலமாக மேற்கு வங்கத்தில் இடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.