பிப்.11 முதல் கொட்டப் போகுது மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Published:

புது தில்லி :

வரும் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி முதல் பிப்ரவரி 13 வரை வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை மையம் வெள்ளிக்கிழமை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

பிப். 11 அன்று பஞ்சாப், ஹரியானா, தில்லி, மேற்கு உத்தரப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், விதர்பா ஆகிய பகுதிகளிலும், தட்சிண கன்னடாவின் உள்மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிப்.12,13 ஆகிய தேதிகளில் காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கன மழைக்கும், கடும் பனிப்பொழிவுக்கும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img