தில்லி வாக்காளர்களிடம் சரியாகச் சென்று சேர பாஜக தவறிவிட்டது: ஆர்.எஸ்.எஸ்.

Published:

mohanbhagwat_story தில்லி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, பாஜக தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பாஜக, தில்லி வாக்காளர்களிடம் சரியாகச் சென்று சேரத் தவறிவிட்டதாக ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை அன்று தில்லியின் ஜண்டேவாலன் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் அலுவலகமான கேசவ் குன்ச்சில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது அந்த அமைப்பின் தலைவர் மோகன்ஜி பாகவத், பிரசனைகளை தில்லி வாக்காளர்களிடம் சரியான வகையில் கொண்டு சேர்த்து அவர்களிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள பாஜக தவறிவிட்டதாக தகவல் தெரிவிப்பதாகக் கூறினார். இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான சுரேஷ் சோனி, தத்ராத்ரேய ஹோஸ்போலெ, டாக்டர் கிருஷ்ண கோபால், மன்மோகன் வைத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related articles

Recent articles

spot_img