chandrababu naidu edi - 2026

சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க உத்தரவு: ஆந்திரம் முழுதும் 144 தடை!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்
chandrababu naidu edi - 2026

சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு செப்.22 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது, ஆந்திரா திறன் மேம்பாட்டுக் கழகத்தில்ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில், ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்திபாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்கே ஹாலில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடுவிடம் பொருளாதார குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்பி தனஞ்செயநாயுடு அளித்த நோட்டீஸில், ஜாமீனில் வெளிவர இயலாத சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு செப்.22 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

தனது 45 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறைக்கு செல்கிறார். 14 ஆண்டுகள் ஆந்திர முதல்வராகவும், 15 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராகவும் சந்திரபாபு நாயுடு இருந்துள்ளார்.

மேலும் சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரணி, கொண்டாட்டங்கள், கூட்டமாக சேர்வது போன்றவற்றிக்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டம்.

திறன் மேம்பாட்டு கழக நிதியில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை அடுத்து அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்; அவரது கைது கண்டித்து, மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் கீழ் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.