IPL 2024: தலை காட்டிய ‘தல’! 20 ரன் வித்தியாசத்தில் சென்னை வெற்றி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இருபத்திநான்காம் நாள்

ஐபிஎல் 2024 – 14.04.2024 

இரண்டு ஆட்டங்கள்

இன்று ஞாயிற்றுகிழமை ஆதலால் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் கொல்கொத்தாவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக  நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. 

கொல்கொத்தா vs லக்னோ

லக்னோ அணியை (161/7, நிக்கோலஸ் பூரன் 45, கே.எல். ராகுல் 39, ஸ்டார்க் 3/28) கொல்கொத்தா அணி (15.4 ஓவரில் 162/2, பில் சால்ட் 89*, ஷ்ரேயாஸ் ஐயர் 38*, மொஹிஷின் கான் 2/29) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று கொல்கொத்தாவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. லக்னோ அணியில் இன்று மூன்று மாற்றங்கள்; ஷமர் ஜோசப், தீபக் ஹூடா, மொஹிஷின் கான் ஆகியோர் நவீன் உல் ஹக், தேவதத் படிக்கல், அர்ஷத் கான் ஆகியோருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டனர். அணியின் தொடக்க வீரர் க்விண்டன் டி காக் இரண்டாவது ஓவரில் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரன் (45 ரன்), ராகுல் (39 ரன்), ஆயுஷ் பதோனி (29 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 161 ரன் எடுத்தது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

162 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரேன் (6 ரன்) 2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அங்கிரிஷ் ரகுவன்ஷி (7 ரன்) நான்காவது ஓவரில் அவுட்டானார்.  மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆடி 89 ரன் அடித்தார். அதில் 14 ஃபோர்கள் மற்றும் 3 சிக்சர்கள். அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் அவருடன் இணைந்து விளையாடி, இறுதி வரை அவரும் ஆட்டமிழக்காமல் இருந்து 38 ரன் அடித்தார். இதனால் கொல்கொத்தா அணி 15.4 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து வெற்றியைப் பெற்றது.

கொல்கொத்தா அணியின் பில் சால்ட் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

மும்பை vs சென்னை

சென்னை அணி (206/4, ருதுராஜ் கெய்க்வாட் 69, ஷிவம் துபே 66*, தோனி 20*, ஹார்திக் பாண்ட்யா 2/43) மும்பை அணியை (186/6, ரோஹித் ஷர்மா 105*, திலக் வர்மா 31, இஷான் கிஷன் 23, பதிரனா 4/28) 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இரண்டாவது ஆட்டம் மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே சென்னை அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரராக ருதுராஜுக்குப் பதிலாக அஜிங்க்யா ரஹானே இறங்கினர். ஆனால் அவர் இரண்டாவது ஓவரில் 5 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா எட்டாவது ஓவரில் 21 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ரஹானே அவுட்டானபோது களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் (40 பந்துகளில் 69 ரன்) மற்றும் ஷிவம் துபே (38 பந்துகளில் ஆடமிழக்காமல் 66 ரன்) இருவரும் வேகமாக ரன் சேர்த்தனர். கடைசி நான்கு பந்துகள் ஆடிய மஹேந்திர சிங் தோனி தொடர்ந்து மூன்று சிக்சர்கள் அடித்து மைதானத்தில் ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். சென்னை அணி 20 ஓவர்களில் நாலு விக்கட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

207 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த மும்பை அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் 15 பந்துகளில் 23 ரன் அடித்து 7.1ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் இரண்டாவது பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரோஹித் ஷர்மா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 105 ரன் எடுத்தார். ஹார்திக் பாண்ட்யா (2 ரன்), ரொமாரியோ ஷெப்பேர்ட் (1 ரன்), டிம் டேவிட் (13 ரன்) ஆகியொர் இன்று சோபிக்கவில்லை. திலக் வர்மா (31 ரன்) ரோஹித் ஷர்மாவுக்கு சிறிது நேரம் ஜோடியாக ஆடினார். இருப்பினும் மும்பை அணியால் 20 ஓவருக்குள் இலக்கை அடைய முடியவில்லை. 20 ஓவரில் அந்த அணி 6 விக்கட் இழப்பிற்கு 186 ரன் மட்டுமே எடுத்து 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள், குறிப்பாக பதிரனா சிறப்பாக பந்து வீசினார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சென்னை அணியின் மதீஷா பதிரனா சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை பெங்களூருவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம்     

14.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 651100.767
கொல்கொத்தா54181.688
சென்னை64280.726
ஹைதராபாத்53260.344
லக்னோ63360.038
குஜராத்6336-0.637
பஞ்சாப்6234-0.218
மும்பை6244-0.234
டெல்லி6244-0.975
பெங்களூரு6152-1.124

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories