stalin - 2026

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது தெலுங்கு மாநிலங்களான ஆந்திராவும், தெலுங்கானாவும் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி நிகழவுள்ள இந்த தீர்மானத்தை ஆதரித்தால் விளையும் அபாயம் குறித்து ஸ்டாலின் புரியாமல் இதை சொல்கிறாரா? அல்லது தமிழகத்திற்கு துரோகம் செய்ய வேண்டும் என்பதற்காக சொல்கிறாரா? என்று தெரியவில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்

இந்த தீர்மானத்தை ஸ்டாலின் சொல்வதுபோல் அதிமுக ஆதரித்தால் என்ன ஆகும்? என்பதை பார்ப்போமா

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் , பல வரிச் சலுகைகளை ஆந்திரா பெறும்
தமிழகத்திலுள்ள தொழிற்சாலைகள் ஆந்திராவுக்குப் போகும்
தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும் பெருகும் !

வாழவைத்த மண்ணை விட தாய் மொழிப் பற்று மேலோங்குவது இயல்புதானே! ஈ.வெ.ரா சொன்னது போல் முட்டாள் தமிழன் ஆந்திரத்திற்காகவும் பொங்குவான் ! திருட்டு இரயில் தலைவர் குடும்பம் வாழ தன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக் கொள்வான் என்ற நம்பிக்கை ஸ்டாலினுக்கு ! அரசியல் லாபத்திற்கு தமிழர் நலத்தை அடகு வைக்கமாட்டேன் என்ற கூறிய மோடி எங்கே ! அரசியல் லாபத்திற்காக தமிழ்நாட்டை சுடுகாடாக்கத் துடிக்கும் ஸ்டாலின் எங்கே? என்று ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்த கூற்று எந்த அளவுக்கு நியாயம் என்பதை பொதுமக்கள் சிந்தித்து தேர்தலின்போது சரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதே தமிழக நலன் காக்க முயல்வோர்களின் எண்ணமாக உள்ளது.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending