சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்த ரஜினி! ஆனா… எத்தனாவது இடம் தெரியுமா?

Published:

rajini kanth - 2026

சக்தி வாய்ந்த மனிதர்கள் என்ற பட்டியலில் இந்த முறை ரஜினியும் இடம்பிடித்தார். ஆனால், அவருக்கு 78-வது இடம் கிடைத்துள்ளது. காரணம், ரஜினி இந்த முறை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றிருப்பதனால்தான்!

இந்தியாவிலுள்ள பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று, இந்தியாவிலுள்ள சக்தி வாய்ந்த மனிதர்கள் என்ற பட்டியலில் 100 பேரை தேர்வு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் வழக்கம்போல், முதல் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாஜக தலைவர் அமித்ஷா 2வது இடமும், இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 3வது இடமும், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் ஜி பாகவத் 4வது இடமும், சோனியா காந்தி 5வது இடமும் பிடித்துள்ளனர்

இந்தப் பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளார். அவருக்கு 64வது இடமும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 65வது இடமும் கிடைத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்துக்கு 78வது இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அரசியல் களத்தில் இறங்கவுள்ள ரஜினிக்கு, அரசியல் ரீதியாக செல்வாக்கு அதிகரித்திருப்பதால் அவருக்கு 78-வது இடம் கிடைத்துள்ளது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img