நாயக் குளிப்பாட்டி நடுவீட்டில் வெச்சாலும்…! பேரிடி கொடுத்த அஃப்ரிடிக்கு பொருந்தும் பழமொழி!

இந்தியா உலகம் சற்றுமுன்

afridi gambhir - 2026

பாம்புக்கு பல்லில் விஷம், என்றால் அப்ரிடி போன்றவர்களுக்கும்தான்! இவங்க திருந்தவே மாட்டாங்க… நாயக் குளிப்பாட்டி நடுவீட்டில் வெச்சாலும்… இப்படியெல்லாம் கருத்துகள் இடப்படுகின்றன, பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் அஃப்ரிடியின் ஒரு டிவீட்க்கு!

அடக்குமுறை ஆட்சியின் கீழ் இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

அது ஐஓகே (இந்தியன் ஆகுபைட் காஷ்மீர்) இல்ல… பிஓகே- பாகிஸ்தான் ஆகுபைட் காஷ்மீர் என்று, விராட் கோலி என்ற பெயரில் இயங்கும் ஒரு நபர் பதில் கருத்து பதிவிட்டிருக்கிறார். மேலும் பலர் டிவிட்டர் பின்னூட்டத்தில் அஃப்ரிடிக்கு சரமாரியாக பதில் கொடுத்து வருகின்றனர்.

இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் அபாயகரமான சூழல் நிலவுகிறது. அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். சுதந்திரத்துக்கும், சுய சிந்தனைக்கும் எதிராக அடக்குமுறை ஆட்சி சவால் விடுகிறது. இந்த அத்துமீறல்களைப் பார்க்கும்போது, ஐ.நா. சபை, சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் எங்கு இருக்கிறது என்று தோன்றுகிறது. இவற்றைத் தடுக்க அவர்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – இப்படி கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மைக் காலமாக, இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. காஷ்மீரின் பொதுமக்கள் வாழும் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவற்றால் இந்திய ராணுவ வீரர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் உயிரிழக்கின்றனர். மேலும், பயங்கரவாத அமைப்புகளின் தொடர் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஷாகித் அஃப்ரிடி இப்படி ஒரு கருத்தை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

 

ஆனால் கௌதம் காம்பிர் இவருக்கு சரியான பதிலடியைக் கொடுத்திருக்கிறார். அவர் தனது டிவிட்டர் பதிவில் யு.என் என்பதை அண்டர் நைண்டீன் என்று அஃப்ரிடி நினைத்துக் கொண்டிருக்கிறார். இப்போதைக்கு அஃப்ரிடி நோ பாலில் விக்கெட் விழுந்ததை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார். அவரது ட்வீட்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.